வெள்ளி, 14 நவம்பர் 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 13 நவம்பர் 2025 (20:12 IST)

ஷர்துல் தாக்கூர் புதிய சாதனை: ஐபிஎல் வரலாற்றில் 3 முறை 'டிரேட்' செய்யப்பட்ட முதல் வீரர்!

ஷர்துல் தாக்கூர் புதிய சாதனை: ஐபிஎல் வரலாற்றில் 3 முறை 'டிரேட்' செய்யப்பட்ட முதல் வீரர்!
இந்திய ஆல்-ரவுண்டர் ஷர்துல் தாக்கூர், ஐபிஎல் வரலாற்றில் வீரர் இடமாற்றம்  மூலம் மூன்று முறை அணி மாறிய முதல் வீரர் என்ற தனித்துவமான சாதனையை படைத்துள்ளார்.
 
2026 ஐபிஎல் தொடருக்காக, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் இருந்து அவர் ரூ. 2 கோடி ஊதியத்திற்கு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாற்றப்பட்டுள்ளார். இது ஒரு முழு பணப்பரிவர்த்தனை ஆகும். கடந்த ஆண்டு LSG அணிக்காக அவர் 10 போட்டிகளில் விளையாடி 10 விக்கெட்டுகளை எடுத்தார்.
 
ஷர்துல் தாக்கூர் இதற்கு முன் 2017-ல் பஞ்சாப் அணியில் இருந்து RPSG-க்கும், 2023-ல் டெல்லிருந்து கொல்கத்தாவுக்கும் டிரேட் செய்யப்பட்டார். தற்போது அவர் இணைந்துள்ள மும்பை அணி, அவர் விளையாடும் ஏழாவது ஐபிஎல் அணி ஆகும்.
 
ஷர்துல் தாக்கூருடன் ஆஷிஷ் நெஹ்ரா, ஷிகர் தவான், ராபின் உத்தப்பா உள்ளிட்ட பல வீரர்கள் இரண்டு முறை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால், மூன்று முறை டிரேட் மூலம் அணி மாறிய முதல் வீரர் என்ற சாதனையை ஷர்துல் பெற்றுள்ளார்.
 
 
Edited by Siva