1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 15 ஜூலை 2025 (09:25 IST)

விராத் கோலி, தோனியை முந்திய ஜடேஜா.. அடுத்த டெஸ்டில் ரிஷப் பண்ட் சாதனை பிரேக் ஆகுமா?

Jadeja
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் ஐந்தாம் நாளில், இந்திய ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா லார்ட்ஸ் மைதானத்தில் ஒரு சிறப்பான இன்னிங்ஸை ஆடினார். இந்தியா தோல்வியின் விளிம்பில் இருந்த நிலையில், ஜடேஜா தனது மன உறுதியுடன் களத்தில் நிலைத்து நின்று, இறுதி நாளில் இந்தியாவை உயிர்ப்புடன் வைத்தார்.
 
இந்த நிலையில் நேற்று ஜடேஜா அடித்த அரைசதம் என்பது அவரது டெஸ்ட் கிரிக்கெட்டில் 25வது அரைசதமாகும். மேலும், இங்கிலாந்தில் அவர் அடித்த 8வது அரைசதம். இதன் மூலம், இங்கிலாந்தில் அதிக அரைசதம்  அடித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலியை அவர் முந்தினார். முன்னதாக, முன்னாள் இந்திய கேப்டன் கோலி மற்றும் அஜிங்க்யா ரஹானேவுடன் தலா ஏழு அரைசதம் அடித்து இருந்தனர். மேலும் எம்.எஸ். தோனி, சௌரவ் கங்குலி, ரிஷப் பண்ட் மற்றும் திலீப் வெங்சர்க்கர் ஆகியோரும் இங்கிலாந்தில் இதே எண்ணிக்கையிலான அரைசதம் அடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் இது ஜடேஜாவின் இந்த தொடரின் நான்காவது தொடர்ச்சியான அரைசதமாகும். இதன் மூலம், இங்கிலாந்தில் தொடர்ச்சியாக நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட அரைசதங்களை அடித்த மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். ரிஷப் பண்ட் மட்டுமே இவரை விட அதிக அரைசதங்களை அதாவது 5 அரைசதங்களை தொடர்ச்சியாக அடித்துள்ளார்.   ஆனால் ஜடேஜா அடுத்த டெஸ்டில் இரண்டு அரைசதங்கள் அடித்தால் ரிஷப் பண்ட் சாதனையும் பிரேக் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva