வெள்ளி, 14 நவம்பர் 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 12 நவம்பர் 2025 (11:13 IST)

சஞ்சு சாம்சன் - ஜடேஜா மாற்றம் நடந்தால், சிஎஸ்கே இந்த வீரரை வாங்க வேண்டும்: அஷ்வின் கொடுத்த ஐடியா..!

சஞ்சு சாம்சன் - ஜடேஜா மாற்றம் நடந்தால், சிஎஸ்கே இந்த வீரரை வாங்க வேண்டும்: அஷ்வின் கொடுத்த ஐடியா..!
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே சஞ்சு சாம்சன், ரவீந்திர ஜடேஜா, சாம் கரன் ஆகியோரை உள்ளடக்கிய வீரர் பரிமாற்ற பேச்சுவார்த்தை நடக்கிறது. இந்த பரிமாற்றம் உறுதியானால், சிஎஸ்கே அணியின் 'நம்பர் 3' இடத்தை பலப்படுத்த நிதிஷ் ராணாவை அல்லது வெங்கடேஷ் ஐயரை வாங்க வேண்டும் என ரவிச்சந்திரன் அஷ்வின் ஆலோசனை வழங்கியுள்ளார்.
 
அஷ்வின் கூற்றுப்படி, சாம்சனும் ருதுராஜும் தொடக்க வீரர்களாக இருந்தால், மூன்றாவது இடத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நிதிஷ் ராணா அல்லது வெங்கடேஷ் ஐயர் சரியாக பொருந்துவார்கள். ராணா ஸ்கொயர் பவுண்டரிகளை எளிதாக அணுகும் திறன் கொண்டவர் என்றும், அவருக்கு சிஎஸ்கே-வில் இணைய அதிக வாய்ப்பு இருப்பதாகவும் அஷ்வின் கருதுகிறார்.
 
ரூ.23.75 கோடி ஏல மதிப்பு கொண்ட வெங்கடேஷ் ஐயர், கொல்கத்தா அணியில்  எதிர்பார்த்த வெற்றியைத் தராததால், அவர் ஏலத்தில் விடுவிக்கப்படலாம். நிதிஷ் ராணா அல்லது வெங்கடேஷ் ஐயர் ஆகியோரை வாங்குவதுடன், கேமரூன் கிரீனை 6வது இடத்தில் சேர்ப்பது சிஎஸ்கே-வின் மிடில் ஆர்டரை வலுப்படுத்தும் என்றும் அஷ்வின் கூறியுள்ளார்.
 
 
Edited by Mahendran