1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : திங்கள், 7 ஏப்ரல் 2025 (13:28 IST)

இந்த பழத்தையா நல்லத்தில்லன்னு சொன்னீங்க! லைவாக தர்பூசணியை அறுத்து வீடியோ போட்ட எம்.எல்.ஏ!

Watermelon controvercies

தர்பூசணி பழத்தில் உடலுக்கு கேடு விளைவிக்கும் நிறமிகள் கலப்பதாக உருவான வதந்தி குறித்து சேலம் மேற்கு எம்.எல்.ஏ வெளியிட்ட வீடியோ வைரலாகியுள்ளது.

 

கோடைக்கால சீசன் தொடங்கிவிட்ட நிலையில் வெயிலில் வாடும் மக்கள் முதலில் நம்பி சாப்பிட வருவது தர்பூசணி பழங்களைதான். அப்படியான தர்பூசணி பழங்களில் சிவப்பு நிறத்திற்காக நிறமிகள் சேர்ப்பதாக உணவு பாதுகாப்பு அதிகாரி ஒருவர் வெளியிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது.

 

அதை தொடர்ந்து தர்பூசணி விவசாயிகள் அதை கண்டித்து போராட்டம் நடத்திய நிலையில் தமிழ்நாடு தோட்டக்கலை துறை அதிகாரிகள் தர்பூசணி வயல்களில் ஆய்வு மேற்கொண்டு அப்படியாக நிறமிகள் எதுவும் தர்பூசணியில் சேர்க்கப்படவில்லை என்று கூறினர்

 

இந்நிலையில் சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான அருள் ராமதாஸ், வீதியோர தர்பூசணி கடைக்கு நேராக சென்று புதுப்பழத்தையே தானே எடுத்து அறுத்து சாப்பிட்டார். மேலும் அதுகுறித்து அந்த வீடியோவில் பேசிய அவர் “உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் காசு வாங்கிக் கொண்டு தர்பூசணி குறித்து தவறான வதந்திகளை பரப்புகிறார்கள், தர்பூசணி இயற்கையானது உடலுக்கு நல்லது. மக்கள் வெயில் காலங்களில் தர்பூசணியை வாங்கி உண்ணுங்கள்” என பேசியுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், விவசாயிகள் பலர் அவருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

 

Edit by Prasanth.K