ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் விஜய்யின் தவெக போட்டியிடுமா? அரசியல் விமர்சகர்கள் கருத்து..!
ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று காலமானார். இதையடுத்து விரைவில் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் புதிதாக கட்சி ஆரம்பித்துள்ள விஜய் இந்த தேர்தலில் போட்டியிடுவாரா அல்லது தனது கட்சி சார்பில் வேட்பாளரை நிறுத்துவாரா என்பது குறித்து அரசியல் விமர்சகர்கள் கூறிய கருத்தை தற்போது பார்ப்போம்.
பெரும்பாலான அரசியல் விமர்சகர்கள், "ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் வந்தால் அதில் தமிழக வெற்றி கழகம் போட்டியிடாது" என்று கூறி வருகின்றனர். ஏனெனில், இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சியின் ஆதிக்கம் இருக்கும் என்பதால், அதில் எதிர்க்கட்சி வெற்றி பெறுவது சாத்தியமில்லாதது. எனவே, முதன்முதலாக சந்திக்கும் தேர்தலை தோல்வியுடன் ஆரம்பிக்க விஜய் விரும்ப மாட்டார் என்றும், அதனால் அவரோ அல்லது அவரது கட்சியின் சார்பிலும் போட்டியிட வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது.
ஏற்கனவே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடந்தபோது, ஆளுங்கட்சியின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது என்பதும், பணம் தண்ணீராக செலவழிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே, விஜய் அந்த ரிஸ்கை எடுக்க மாட்டார் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.