திங்கள், 16 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 6 மார்ச் 2024 (08:55 IST)

நீலகிரி தொகுதி கிடைக்காததால் திட்டமிட்டு பேசுகிறாரா ஆ ராசா.. பிரபல பத்திரிகையாளர் சந்தேகம்..

a raja
திமுக எம்பி யார் ஆ ராசா கடந்த சில நாட்களாக இந்து கடவுள்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வரும் நிலையில் திமுகவுக்கு பாதிப்பு ஏற்பட வேண்டும் என்று அவர் திட்டமிட்டு பேசி வருவதாக தெரிகிறது என்று பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தற்போது திமுக எம்பி ஆக இருக்கும் ஆ ராசாவுக்கு மீண்டும் டிக்கெட் கிடைக்காது என்று ஒரு வதந்தி கிளம்பி வந்துள்ளது.

இதனால் வெறுத்துபோன ஆ ராசா திமுகவிலிருந்து கொண்டே திமுகவை அழிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அதற்காகத்தான் அவர் வேண்டுமென்று இந்து கடவுள்கள் குறித்தும் சனாதனம் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையாக பேசியதாகவும் பிரபல பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் தான் ஐந்து மாநில தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது என்று கூறப்படும் நிலையில் மீண்டும் மீண்டும் சனாதனம் மற்றும் இந்து கடவுள்கள் குறித்து திமுக எம்பி ஒருவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதால் திமுகவுக்கு அவரே நெருக்கடி கொடுப்பதாக அந்த பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார்

தனக்கு சீட் கிடைக்கவில்லை என்றால் திமுக ஜெயிக்க கூடாது என்ற எண்ணத்தில் தான் அவர் பேசி வருவதாகவும் அவரது பேச்சில் உள்நோக்கம் இருப்பதாகவும் கூறப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



Edited by Siva