வியாழன், 12 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 3 ஆகஸ்ட் 2024 (11:49 IST)

மெட்ரோ ரயில் பணிகளுக்காக விநாயகர், அம்மன் கோயில்களை இடிப்பதா? போலீசாருடன் வாக்குவாதம்

மெட்ரோ ரயில் பணிகளுக்காக விநாயகர் கோவில் மற்றும் துர்க்கை அம்மன் கோவிலை இடிப்பதா என போலீசார் உடன் பொதுமக்கள் வாக்குவாதம் செய்ததால் சென்னையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
சென்னையில் மெட்ரோ பணீக்காக ரத்தின விநாயகர் கோவில் மற்றும் துர்க்கை அம்மன் கோவில்களை இடிக்க திட்டமிடப்பட்டிருந்ததாக செய்திகள் வெளியான நிலையில் இது குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபு கோயில் உள்ள பகுதிகளில் நேரில் ஆய்வு செய்ய வருகை தந்தார்.
 
நீதிபதி வருகை ஒட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டிருந்த நிலையில் கோவிலுக்குள் பக்தர்களை அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது . இந்த நிலையில் கோவில்களுக்குள் பக்தர்களை அனுமதிக்காததால் போலீசாரிடம் பக்தர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
 
மேலும் கோவிலை இடிக்க அனுமதிக்க கூடாது என்றும் நாங்கள் நேரில் நீதிபதியை சந்தித்து சில கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கூறிய நிலையில் அதற்கு போலீசார் அனுமதி அளிக்காததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் போலீசாருக்கும் பக்தர்களுக்கும் இடையே சில நிமிடங்கள் வாக்குவாதம் நடந்ததாக கூறப்படுகிறது 
 
Edited by Mahendran