வியாழன், 12 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 6 செப்டம்பர் 2024 (12:57 IST)

விஜயபிரபாகரன் தொடர்ந்த தேர்தல் வழக்கு.! மாணிக்கம் தாக்கூர், தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு.!

Vijayaprabakaran
மக்களவை தேர்தலில் விருதுநகர் தொகுதியில் மாணிக்கம் தாக்கூர் வெற்றி பெற்றதை எதிர்த்து விஜயபிரபாகரன் தாக்கல் செய்த தேர்தல் வழக்கில்,  மாணிக்கம் தாக்கூர், தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தில் விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட  மாணிக்கம் தாகூர்,  4 ஆயிரத்து 379 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
 
அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி, தொகுதியில் போட்டியிட்ட தே.மு.தி.க வேட்பாளர் விஜய பிரபாகரன், சென்னை உயர் நீதிமன்ற தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தேர்தல் வேட்புமனுக்களில் மாணிக்கம் தாகூர் உண்மை தகவல்களை மறைத்ததாகவும், ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
 
இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி சதீஷ்குமார்,   மாணிக்கம் தாக்கூர் மற்றும் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை அக்டோபர் 14ம் தேதிக்கு  தள்ளிவைத்தார்.