புதன், 26 நவம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth K
Last Modified: புதன், 5 நவம்பர் 2025 (14:52 IST)

9 மணி நேரம் விஜய் அழுதார்! தைரியம் இருந்தா என் தலைவன் மேல கை வைங்க! - ஆதவ் அர்ஜூனா சவால்!

aadhav arjuna

கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று மாமல்லபுரத்தில் நடைபெற்றது.

 

இதில் கட்சி தலைவர் விஜய், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர். அதில் பேசிய ஆதவ் அர்ஜூனா “கரூரில் நடந்த துயர சம்பவத்தால் 9 மணி நேரமாக விஜய் அழுதார். கரூரில் உயிரிழந்த மக்களுக்காக 30 நாட்களாக கண்ணீர் சிந்தியது மட்டுமல்லாமல், அவர்கள் குடும்பத்தினரை சந்தித்தபோது ஒரு புகைப்படத்தை கூட விஜய் வெளியிடவில்லை.

 

மக்கள் உணர்வுகளை வைத்து அரசியல் செய்யும் கட்சியல்ல தவெக. இவ்வளவு மக்கள் கூட்டம் வரும் என உளவுத்துறைக்கு தெரியாதா? தெரியவில்லை என்றால் உள்துறை அமைச்சரை ராஜினாமா செய்ய சொல்லுங்கள். சட்டமன்ற தேர்தலின்போது கருப்பு சிவப்பு சைக்கிளில் வந்து உங்களை ஆதரித்தாரே விஜய். உங்களுக்கு நன்றியே இல்லையா?

 

உங்களுக்கு தைரியம் இருந்தால் என் தலைவர் மீது கை வையுங்கள் பாக்கலாம். நீங்கள் அவர் வீட்டுக்கு சென்றால், ஒட்டுமொத்த கல்லூரி இளைஞர்களும் உங்கள் வீட்டிற்கு வருவார்கள்” என பேசியுள்ளார்.

 

Edit by Prasanth.K