திங்கள், 16 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 28 மார்ச் 2024 (14:02 IST)

வருண் காந்தியை கைவிட்ட பாஜக.. காங்கிரஸ் அழைப்பு விடுப்பதாக தகவல்..!

varun gandhi
வருண் காந்தியின் அம்மா மேனகா காந்திக்கு  தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்த பாஜக, வருண் காந்திக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. இந்த நிலையில் வருண் காந்திக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளதாகவும் ஆனால் வருண் காந்தியிடம் இருந்து மௌனம் தான் பதிலாக வந்து கொண்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பாஜக வேட்பாளர் பட்டியல் கிட்டத்தட்ட முழுமையாக முடிவடைந்துவிட்ட நிலையில் மீண்டும் போட்டியிட வருண் காந்திக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அவர் போட்டியிட்ட பிலிபித் என்ற தொகுதியில் அவருக்கு பதிலாக வேறொருவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில் தனக்கு வாய்ப்பு கிடைக்காதது போல் தனது தாய்க்கும் வாய்ப்பு கிடைக்காது என்றும் அதனால் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடலாம் என்று வருண் காந்தி திட்டமிட்ட நிலையில் , அவரது தாய் மேனகா காந்திக்கு வாய்ப்பளித்ததன் மூலம் வருண் காந்தி தற்போது அமைதியாக இருப்பதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் வருண் காந்திக்கு காங்கிரஸ் தலைப்பில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் அவர் காங்கிரஸ் சென்றால் மேனகா காந்திக்கு தர்ம சங்கடமான நிலை ஏற்படும் என்பதால் அவர் மௌனம் காப்பதாகவும் கூறப்படுகிறது

Edited by Mahendran