வியாழன், 12 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 2 டிசம்பர் 2024 (07:29 IST)

கனமழை எதிரொலி: தமிழகத்தில் இன்று ரயில்கள் ரத்து குறித்த முழு விவரங்கள்..!

Train
கனமழை காரணமாக தமிழகத்தில் இன்று சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் அதுகுறித்த முழு விவரங்கள் இதோ:
 
மழை பாதிப்பு காரணமாக கீழ்க்கண்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன மற்றும் மாற்று வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன:
 
மழை பாதிப்பு காரணமாக இன்று எழும்பூர் - திருச்சி செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 3 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
 
விழுப்புரம் - தாம்பரம் செல்லும் ரயில் மற்றும் புதுச்சேரி - எழும்பூர் இடையிலான ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
 
விக்கிரவாண்டி - முண்டியம்பாக்கம் இடையிலான பாலம் துண்டிக்கப்பட்டதை அடுத்து ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
 
தஞ்சையில் இருந்து நேற்று எழும்பூர் புறப்பட்ட உழவன் எக்ஸ்பிரஸ் (16866) விழுப்புரம், காட்பாடி வழியாக எழும்பூர் செல்லும். மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம், மாம்பலம் நிலையங்களில் ரயில் நிற்காது.
 
மன்னார்குடியில் இருந்து நேற்று எழும்பூர் புறப்பட்ட ரயில் (16180), செங்கல்பட்டு, தாம்பரம், மாம்பலம் நிறுத்தங்களில் நிற்காது.
 
காரைக்காலில் இருந்து நேற்றிரவு தாம்பரம் புறப்பட்ட ரயில் (16176) விழுப்புரம், காட்பாடி வழியாக எழும்பூர் செல்லும். செங்கல்பட்டில் நிற்காது.
 
செங்கோட்டையில் இருந்து நேற்று புறப்பட்ட சிலம்பு அதிவேக எக்ஸ்பிரஸ் ரயில் (20682) விழுப்புரம், காட்பாடி வழியாக எழும்பூர் செல்லும். செங்கல்பட்டில் நிற்காது.
 
மேலும் பயணிகள் தங்களுடைய பயணத்துக்கு முன் தகவல்களை சரிபார்க்குமாறு ரயில்வே துறை கேட்டுக்கொண்டுள்ளது.
 
 
Edited by Siva