வியாழன், 12 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 26 ஆகஸ்ட் 2024 (07:19 IST)

இன்று கிருஷ்ண ஜெயந்தி விடுமுறை நாள்.. சென்னை மெட்ரோ சேவையில் மாற்றம்..!

metro rail
இன்று கிருஷ்ண ஜெயந்தி விடுமுறை நாளை ஒட்டி சென்னை மெட்ரோ ரயில் சேவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையின் அடையாளங்களில் ஒன்று மெட்ரோ ரயில் என்பதும் சென்னை மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் மெட்ரோ சேவை அதிகாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை செயல்பட்டு வருகிறது என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் சென்னை மெட்ரோ ரயில்கள் விடுமுறை நாட்களில் மட்டும் ரயில்களின் ரயில் சேவையில் சில மாற்றம் செய்யப்படும் என்றும் அந்த வகையில் இன்று கிருஷ்ண ஜெயந்தி விடுமுறை தினம் என்பதால் சனிக்கிழமை அட்டவணையில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை அட்டவணையை பின்பற்றி இன்று மெட்ரோ ரயில்கள் காலை 5 மணி முதல் இயக்கப்படும் 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படும் என்றும் மெட்ரோ ரயில் ல் நிர்வாகம் அறிவித்துள்ளது. இன்று அரசு விடுமுறையாக இருந்தாலும் தனியார் நிறுவனங்கள் பல இயங்கும் என்பதால் மெட்ரோ ரயில் சேவையில் அதிக அளவு பயணிகள் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva