திங்கள், 16 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 7 பிப்ரவரி 2024 (06:56 IST)

ஜேபி நட்டா, அண்ணாமலை கலந்து கொள்ளும் கூட்டத்திற்கு அனுமதி மறுப்பா? தமிழக அரசு அதிரடியா?

jp nadda
சென்னையில் ஜேபி நட்டா மற்றும் அண்ணாமலை கலந்து கொள்ள இருக்கும் கூட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில மாதங்களாக அண்ணாமலை நடத்தி வரும் என் மண் என் மக்கள் என்ற பாதயாத்திரை பயணம் முடிவடையும் நிலையில் உள்ளது. இந்த நிலையில் வரும் 11ஆம் தேதி சென்னையில் பாஜக பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ள நிலையில் இதற்காக மூன்று இடங்களை தேர்வு செய்து தமிழக காவல் துறையிடம் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் அதில் இரண்டு இடங்களில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதிக்க முடியாது என்றும் அந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் தமிழக போலீசார் கூறியுள்ளதாக தெரிகிறது.

பெருங்குடி, சோழிங்கநல்லூர், நந்தனம் ஆகிய பகுதிகளில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி இல்லை என்றும் செயின் ஜார்ஜ் பள்ளியில் நடைபெறும் கூட்டத்திற்கு மட்டும் போலீசார் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜேபி நட்டா கலந்து கொள்ளும் கூட்டத்திற்கு அனுமதி இல்லை என்ற தகவலால் தமிழக பாஜக மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Siva