1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth K
Last Modified: வெள்ளி, 18 ஜூலை 2025 (11:16 IST)

தப்பை தட்டிக்கேட்ட DSPயிடம் காரை பிடுங்கி இருக்காங்க! - எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்குத் துறை டிஎஸ்பியிடம் அரசு வாகனம் பறிக்கப்பட்ட சம்பவம் குறித்து எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்குத் துறை டிஎஸ்பியான சுந்தரேசன் அவர்களுக்கு அரசு வாகனம் வழங்கப்பட்டிருந்த நிலையில் அதை சமீபத்தில் திரும்ப பெற்றது பரபரப்பை ஏற்படுத்தியது. வாகனம் இல்லாமல் டிஎஸ்பி சாலையில் நடந்தே செல்லும் வீடியோக்கள் வைரலாகியுள்ளது.

 

மதுவிலக்குத்துறை டிஎஸ்பியாக செயல்பட்டு வரும் சுந்தரேசன் கடந்த நவம்பர் மாதம் முதலாக சட்டவிரோத மது விற்பனை செய்பவர்கள், போதைப் பொருள் வியாபாரிகள் என பலரை கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளார். ஆனால் மேலதிகாரிகள் தன் மீது தவறான பிம்பத்தை ஏற்படுத்துவதாகவும், அழுத்தம் தருவதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார். 

 

இந்நிலையில் இதுகுறித்து எழுச்சிப் பயணத்தில் கண்டனம் தெரிவித்து பேசிய எடப்பாடி பழனிசாமி “திமுக ஆட்சியில் நேர்மையான அதிகாரிகளுக்கு வேலையில்லை. யார் ஜால்ரா தட்டுகிறார்களோ அவர்களுக்குதான் வேலை. இங்கே ஒரு டிஎஸ்பி முறைகேடாக செயல்பட்ட மதுக்கடைகளை மூடியுள்ளார். சட்டவிரோத மது விற்பனைகளை தடுத்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகளை பதிவு செய்துள்ளார்.

 

இன்றைக்கு இந்த திமுக அரசு அந்த நேர்மையான அதிகாரியின் வாகனத்தை பிடுங்கி விட்டார்கள். இப்படிப்பட்ட நேர்மையான அதிகாரிகளை கேவலப்படுத்திவிட்டு எப்படி போதைப் பொருளை ஒழிக்க முடியும். இப்படி அவர்களை நடத்தினால் எப்படி அவர்களால் மக்களை பாதுகாக்க முடியும்? நாட்டை பாதுகாக்க முடியும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

 

Edit by Prasanth.K