திங்கள், 16 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 24 டிசம்பர் 2023 (09:41 IST)

காதலிக்க மறுத்த ஐ.டி இளம்பெண் எரித்துக் கொலை! – முன்னாள் காதலன் செய்த கொடூரம்!

crime
செங்கல்பட்டு மாவட்டம் நாவலூர் பகுதியில் ஐ.டியில் பணிபுரியும் இளம்பெண் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



மதுரையை சேர்ந்த 28 வயது இளம்பெண் நந்தினி. இவர் செங்கல்பட்டு மாவட்டம் நாவலூரில் உள்ள ஐ.டி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கும் வெற்றி என்ற இளைஞருக்கும் இடையே காதல் இருந்து வந்த நிலையில் சில காலம் முன்னதாக நந்தினி அவருடனான காதலை முறித்துக் கொண்டதாகவும், பின்னர் வேறு ஒரு இளைஞருடன் நந்தினி காதலில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று நந்தினியின் பிறந்தநாளில் அவரை சந்தித்த முன்னாள் காதலன் வெற்றி அவரை கோவிலுக்கு செல்லலாம் என்று அழைத்து சென்றுள்ளார். அங்கிருந்து சர்ப்ரைஸ் தருவதாக காட்டுப்பகுதிக்கு நந்தினியை அழைத்து சென்ற அவர் அங்கு நந்தினியின் கை, கால்களை வெட்டி அவர் மேல் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார்.

உடல் முழுவதும் எரிந்து உயிருக்கு போராடிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட நந்தினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் நந்தினியின் முன்னாள் காதலன் வெற்றியை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K