திங்கள், 16 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 2 ஜனவரி 2024 (14:09 IST)

பிரதமரால் இன்று திறக்கப்பட்ட திருச்சி விமான நிலையத்தில் என்னென்ன சிறப்புகள்?

பிரதமர் மோடி இன்று திருச்சியில் அமைந்துள்ள புதிய விமான நிலையத்தை திறந்து வைத்த நிலையில் இந்த விமான நிலையத்தில் என்னென்ன சிறப்புகள் என்பதை பார்ப்போம்.

1. திருச்சி விமான நிலையம் 60 ஆயிரத்து 723 ச.மீ பரப்பளவில் 2 அடுக்குகளாக அமைக்கப்பட்டுள்ளது.

2. ஒரே நேரத்தில் 4 ஆயிரம் பன்னாட்டு பயணிகள்,  1500 உள்நாட்டுப் பயணிகளை கையாள்வதற்கு 40 செக் அவுட் மற்றும் 48 செக் இன் கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

3. விமானங்களை நிறுத்த 10 ஏப்ரான்கள், ஏரோ பிரிட்ஜ்,  26 இடங்களில் லிஃப்ட் மற்றும் எஸ்கலேட்டர்கள்   அமைக்கப்பட்டுள்ளது.

4.  3 சுங்கத்துறை பரிசோதனை மையங்கள், 15 எக்ஸ்ரே சோதனை மையங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

5.  3 இடங்களில் விஐபி காத்திருப்பு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது,

6. ஒரே நேரத்தில் 1000 கார்களை நிறுத்தும் வகையில் பார்க்கிங் அமைக்கப்பட்டுள்ளது.

7. ரூ.75 கோடி செலவில் 42.5 மீட்டர் உயரம் கொண்ட கண்காணிப்பு கோபுரத்துடன் கூடிய வான் கட்டுப்பாட்டு அறை உள்ளது.

Edited by Siva