திங்கள், 16 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 27 அக்டோபர் 2024 (15:10 IST)

முதல் தீர்மானமே அனிதாவுக்காக.. நீட்க்கு தடை! விஜய் காட்டப்போகும் அதிரடி? - 19 தீர்மானங்கள் என்ன?

TVK Flag

தமிழக வெற்றிக் கழகத்தில் முதல் மாநாடு இன்று விக்கிரவாண்டியில் நடைபெறும் நிலையில் மத்திய அரசின் திட்டங்களுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

 

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று விக்கிரவாண்டியில் மாலை தொடங்குகிறது. காலை முதலே தொண்டர்கள் வந்து குவியத் தொடங்கியதால் ஒரு மணி நேரம் முன்னதாகவே மாநாடு தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாநாடு தொடக்கமாக கட்சி பாடல் மற்றும் விஜய்யின் திரையிசைப் பாடல்கள் ஒலிக்கப்பட இருக்கிறது. அதன் பின்னர் சிறிய அளவிலான கலை நிகழ்ச்சிகளும், அதன் பின்னர் கட்சி கொடியை விஜய் ஏற்றும் நிகழ்வும் நடக்க இருக்கிறது.

 

இந்த மாநாடு நிகழ்ச்சியை தொகுப்பாளர்கள் பிரியங்கா மற்றும் மா.க.ப தொகுத்து வழங்க உள்ளனர். 
 

 

இந்த மாநாட்டில் முக்கியமாக கட்சி கொள்கைகளையும், சில தீர்மானங்களையும் நடிகர் விஜய் நிறைவேற்ற உள்ளார். அதில் முதல் தீர்மானமாக நீட் தேர்வு ஒழிப்பு நிறைவேற்றப்பட உள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது. நீட் தேர்வால் அனிதா உயிரிழந்த நாள் தொட்டு நீட் தேர்வுக்கு எதிராக நடிகர் விஜய் கருத்துகளை தெரிவித்து வருகிறார்.

 

மேலும் ஒரு நாடு ஒரு தேர்தலுக்கு எதிரான தீர்மானம், தமிழ்நாட்டில் பூரண மது ஒழிப்பு அமல்படுத்த கோரிய தீர்மானம் என பல முக்கியமான 19 தீர்மானங்களை நிறைவேற்ற உள்ளாராம் நடிகர் விஜய்.

 

Edit by Prasanth.K