புதன், 26 நவம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth K
Last Modified: திங்கள், 27 அக்டோபர் 2025 (12:59 IST)

பெத்த அப்பன் என்னை உள்ளே விடல! விஜய்யை சந்திக்க சென்ற உயிரிழந்தவரின் தந்தை வேதனை!

TVK Vijay

கரூரில் பலியானவர்களின் குடும்பங்களை இன்று விஜய் சந்திக்கும் நிலையில் பலியான ஒருவரின் தந்தையை உள்ளே விடாதது பரபரப்பை ஏற்படுத்தியது.

 

கடந்த மாதம் 27ம் தேதி கரூரில் விஜய் நடத்திய பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியானார்கள். அவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கிய விஜய் ஒரு மாதம் கழித்து இன்று மகாபலிபுரத்தில் வைத்து அவர்களை சந்தித்து ஆறுதல் கூறுகிறார். 

 

விஜய்யிடம் ஆறுதல் பெறுவதற்காக கரூரில் இருந்து பாதிக்கப்பட்டவர்கள் அழைத்துச் செல்லப்பட்டு தங்க வைக்கப்பட்டனர். பவானியை சேர்ந்த மோகன் என்பவர் கூட்ட நெரிசலில் பலியாகி இருந்த நிலையில் அவரது தந்தை கந்தசாமியை தவெகவினர் அழைத்துச் செல்லாததால் அவர் தனியாக பேருந்தில் ஏறி நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு வந்துள்ளார்.

 

ஆனால் அவரை உள்ளே அனுமதிக்க தவெகவினர் மறுத்துள்ளனர். அவர் தனது மகனின் இறப்புச் சான்றிதழைக் காட்டிய பிறகே அவரை உள்ளே செல்ல அனுமதித்துள்ளனர். இதனால் அங்கு சற்று நேரம் பரபரப்பு எழுந்துள்ளது.

 

Edit by Prasanth.K