திங்கள், 16 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 28 மார்ச் 2024 (15:06 IST)

சூடு பிடிக்கும் தேர்தல் பிரச்சாரம்..! ஏப்ரல் 4-ல் அமித் ஷா தமிழக வருகை..!!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக ஏப்ரல் 4 ஆம் தேதி தமிழகம் வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தற்போது தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில், வேட்பாளர்களை ஆதரித்து அந்தந்த கட்சி தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
தேசிய தலைவர்களும் தமிழகத்துக்கு வந்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளனர். இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஏப்ரல் முதல் வாரத்தில் ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
பாஜக வேட்பாளர்கள் ஆதரித்து பிரதமர் மோடியும் பிரச்சாரம் மேற்கொள்ள மீண்டும் தமிழகம் வருகிறார்.  இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாள் பயணமாக ஏப்ரல் 4 ஆம் தேதி தமிழகம் வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


ஏப்ரல் 4 ஆம் தேதி  மதுரை, சிவகங்கை தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ளும் அமித்ஷா, 5 ஆம் தேதி சென்னையில் பிரச்சாரம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.