1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 7 ஆகஸ்ட் 2022 (12:53 IST)

ஆன்லை சூதாட்ட தடை; கருத்து சொல்ல மக்களுக்கு அழைப்பு! – தமிழ்நாடு அரசு!

ஆன்லைன் சூதாட்ட செயலிகளுக்கு தடை விதிப்பது தொடர்பாக பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்க தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளில் பலரும் பணத்தை இழப்பது, விரக்தியில் தற்கொலை செய்து கொள்வது நாளுக்கு நாள் தொடர்ந்து வருகிறது. முன்னதாக ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தமிழக அரசு விதித்த தடை நீதிமன்றத்தால் நீக்கப்பட்டது.

இந்நிலையில் ஆன்லைன் சூதாட்ட செயலிகளுக்கு எதிராக புதிய சட்டத்தை கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக மக்களின் கருத்துகளை கேட்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

ஆன்லைன் சூதாட்ட செயலிகள் குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துகலை homesec@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு ஆகஸ்டு 12ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.