திங்கள், 16 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 31 டிசம்பர் 2023 (12:40 IST)

ஆளுநர் பதவியை ராஜினாமா செய்கிறாரா தமிழிசை? அவரே அளித்த விளக்கம்..!

tamilisai
தெலுங்கானா மற்றும் புதுவை மாநில கவர்னராக இருக்கும் தமிழிசை சௌந்தரராஜன் தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின.

மேலும் அவர் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட போவதாகவும் கூறப்பட்டது. இதுகுறித்து ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார்.

அந்த விளக்கத்தில், ‘நான் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளேன் என்ற செய்தி தவறானது. மேலிட உத்தரவு என்னமோ அதைத்தான் நான் செய்து வருகிறேன். நான் எப்போதும் மக்களுக்காக இருப்பேன். பிரதமர் மோடி மற்றும் ஸ்ரீ ராமரின் தயவால் நான் எனது மனசாட்சிப்படி பணியாற்றி வருகிறேன்.  

எனவே கவர்னர் பதவியை ராஜினாமா செய்வேன் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவித்துள்ளார்.

Edited by Siva