பாமகவில் ராமதாஸ் - அன்புமணி இடையே மோதல் வலுத்துள்ள நிலையில் இன்று ராமதாஸ் நடத்தும் செயற்குழு கூட்டத்திற்கு போட்டியாக பாமக நிர்வாகிகள் கூட்டத்தை நடத்துகிறார் அன்புமணி.
திண்டிவனத்தில் இன்று நடந்து வரும் பாமக செயற்குழு கூட்டத்தில் தேர்தல் கூட்டணி குறித்த அனைத்து முடிவுகளையும் பாமக தலைவர் ராமதாஸ்தான் எடுப்பார், அவருக்குதான் முழு அதிகாரம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அன்புமணியின் சமீபத்திய செயல்பாடுகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் செயற்குழு கூட்டத்திற்கு வந்த ராமதாஸின் மகள் காந்திமதியும் மேடை ஏற்றப்பட்டுள்ளது, அன்புமணி ஆதரவாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இது ஒருபக்கம் இருக்க தைலாபுரத்துக்கு போட்டியாக பனையூரில் இன்று பாமக நிர்வாகக் குழுவை கூட்டியுள்ளார் செயல்தலைவர் அன்புமணி. ஆலோசனை கூட்டத்தில் அன்புமணியின் ஆதரவாளர்களான திலகபாமா, பாலு, ராவணன் என பலரும் கலந்துக் கொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில் செயற்குழு கூட்ட தீர்மானங்களை நீக்கும் தீர்மானங்களை எடுக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பனையூர், தைலாபுரம் இடையே எழுந்துள்ள மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K