திங்கள், 16 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 15 மார்ச் 2024 (17:19 IST)

மதுரை மக்களவை தொகுதியில் சு.வெங்கடேசன் மீண்டும் போட்டியா?

மதுரை மக்களவைத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக சு.வெங்கடேசன் மீண்டும் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் திண்டுக்கல் தொகுதியில் சச்சிதானந்தம் போட்டியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இன்னும் சற்று நேரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து வேடபாளர்களை அறிவிக்க உள்ளார் என கூறப்படுகிறது.
 
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதும் மதுரை மற்றும் திண்டுக்கல் என ஒதுக்கப்பட்டுள்ள இந்த இரண்டு தொகுதிகளில் வேட்பாளர் தேர்வு கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது என்றும் செய்திகள் வெளியானது. 
 
இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு மதுரை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சு வெங்கடேசன் அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முடிவு செய்திருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. 
 
அதேபோல் திண்டுக்கல் தொகுதிக்கு வேட்பாளராக சச்சிதானந்தன் என்பவரை அறிவிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.மதுரை, திண்டுக்கல் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு நல்ல செல்வாக்கு இருப்பதால் மீண்டும் இருவருமே வெற்றி பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
Edited by Mahendran