வியாழன், 12 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 11 செப்டம்பர் 2024 (20:33 IST)

4 நாட்கள் தொடர் விடுமுறை.. சிறப்பு பேருந்துகள் குறித்த முக்கிய அறிவிப்பு..!

வார இறுதி நாட்கள், மிலாது நபி என 4 நாட்கள் தொடர் விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன என தமிழக அரசின் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்த முக்கிய தகவல்கள் இதோ:
 
செப்.13,14 ஆகிய நாட்களில் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 955 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது
 
செப்.13,14 ஆகிய நாட்களில் சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 190 பேருந்துகளும், மாதாவரத்திலிருந்து  20 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது
 
பெங்களூர், திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 350 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
 
ஞாயிறு முதல் செவ்வாய் வரை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது
 
தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க http://tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
Edited by Siva