1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth K
Last Modified: திங்கள், 7 ஜூலை 2025 (10:10 IST)

ஏழை மாணவர்கள் தங்குவதற்காக இனி ‘சமூகநீதி விடுதிகள்’ - முதல்வர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்பு!

Social justice hostel

தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வரும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான விடுதிகளில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

 

தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளி, கல்லூரிகள் ஏராளமாக செயல்பட்டு வரும் நிலையில் அதில் படிக்கும் மாணவ, மாணவியருக்காக விடுதிகள் அரசால் அமைத்து தரப்பட்டுள்ளது. தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை என பல துறைகளின் சார்பில் அச்சமூக மாணவர்களுக்காக விடுதிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றிற்கு அந்தந்த சமூகத்தை குறிக்கும் துறைசார்ந்த பெயர்களாக பிற்படுத்தப்பட்டோர் மாணவர் நல விடுதி, ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதி என பெயரிடப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் தற்போது இதில் பெயர் மாற்றத்தை ஏற்படுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் “பேதங்களைத் தகர்த்தெறிந்து சமத்துவத்தையும் - சமூகநீதியையும் காக்க புரட்சியால் புதுமையைப் படைப்பதே திராவிட வரலாறு!

 

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும் ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும்!” என்று அறிவித்துள்ளார்.

 

Edit by Prasanth.K