வியாழன், 12 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 13 ஆகஸ்ட் 2024 (15:22 IST)

பேருந்து ஓட்டுநரிடம் நடிகர் சேரன் வாக்குவாதம்..! என்ன காரணம் தெரியுமா.?

Cheran
கடலூரில் தனியார் பேருந்து ஓட்டுநரிடம், நடிகர் சேரன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
 
கடலூரில் இருந்து ஏராளமான பேருந்துகள் புதுச்சேரிக்கு இயக்கப்பட்டு வருகிறது. தனியார் பேருந்துகளும் அதிகம் இயக்கப்பட்டு வருகிறது. தனியார் பேருந்துகள் போட்டிப் போட்டுக் கொண்டு செல்லும் நிலையில் சில பேருந்துகளில் தடை செய்யப்பட்ட ஹேர் ஹாரன் பயன்பாட்டில் உள்ளது.
 
இந்நிலையில் புதுச்சேரியில் இருந்து கடலூர் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து இயக்குநரும், நடிகருமான சேரன் பயணித்த கார் பின்னே நீண்ட நேரமாக அதிக ஒலியுடன் ஹாரன் அடித்ததாக கூறப்படுகிறது. 
 
பெரியகங்கனாகுப்பம் பகுதியில் உடனடியாக நடுரோட்டில் காரை நிறுத்திய சேரன், கீழே இறங்கி தனியார் பேருந்து ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அங்கிருந்த மற்ற வாகன ஓட்டுநர்கள் மற்றும் பேருந்து நடத்துநர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் ஆகியோர் ஒன்று கூடினர்.


தட்டிக்கேட்ட சேரனுக்கு, சிலர் கை கொடுத்து வாழ்த்தும் தெரிவித்தனர். தற்பொழுது இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.