பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி நிகழ்வில் கலந்துக் கொண்ட நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் ஒன்றாக பேட்டியளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை இன்று ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் நடந்து வரும் நிலையில் பல கட்சி தலைவர்களும் அங்கு சென்று தேவர் நினைவிடத்தில் மரியாதை செய்து வருகின்றனர்.
அவ்வாறாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அங்கு சென்றிருந்த நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வரவே, ஓடிச் சென்ற சீமான் அவரை கட்டியணைத்துக் கொண்டு பேசினார். பின்னர் அவரை செய்தியாளர்கள் சந்திப்பு நடக்கும் இடத்திற்கு அழைத்தார்.
அங்கு வந்த வைகோ, சீமானை புகழ்ந்து சில வார்த்தைகள் பேசினார். அப்போது திமுக கூட்டணியில் இருக்கிறீர்கள், சீமானை வாழ்த்தி பேசுகிறீர்களே என ஒருவர் கேட்க, அதற்கு சீமான் “நானும் அவரும் அண்ணன் தம்பிகள்” என பேசினார். வைகோ பேசியபோது “நான் உடல்நலமில்லாமல் மருத்துவமனையில் இருந்தபோது சீமான் வந்து என்னை பார்த்தான். அவனுக்கு முடியவில்லை என்றால் நான் போன் செய்து நலம் விசாரிப்பேன். நாங்கள் அண்ணன், தம்பிகள்” என கூறினார்.
Edit by Prasanth.K