நெல்லையில் ரூ.6,000 நிவாரணம் பெற இன்று கடைசி.. டோக்கன் பெற்றவர்களுக்கு அறிவிப்பு..!
நெல்லை உள்பட நான்கு மாவட்டங்களில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது என்பதும் இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக லட்சக்கணக்கான மக்கள் தங்கள் உடமைகளை இழந்தனர் என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் தமிழக அரசு வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6000 நிவாரணத்தொகை வழங்குவதாக அறிவித்ததோடு ரேஷன் அட்டையை ஆய்வு செய்து டோக்கன்களையும் வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
ரேஷன் கடைகளில் டோக்கன்களை கொடுத்து ரொக்கமாக பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் கடந்த சில நாட்களாக பொதுமக்கள் ரூபாய் 6000 ரொக்கத்தை பெற்று வந்தனர்
இந்த நிலையில் நிவாரண தொகை ரூபாய் 6000 பெற டோக்கன் பெற்றவர்களுக்கு இன்று கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து நிவாரண தொகை டோக்கன் பெற்றவர்கள் இன்று மாலை 5 மணிக்குள் ரேஷன் கடைகளுக்கு சென்று தொகையை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Edited by Siva