திங்கள், 16 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 8 நவம்பர் 2024 (13:15 IST)

கந்த சஷ்டி தினத்தில் கண் திறந்த சிவலிங்கம்.. ராணிப்பேட்டை அருகே பரபரப்பு..!

கந்த சஷ்டி திருவிழா நேற்று தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் நேற்று ராணிப்பேட்டை அருகே உள்ள கைலாசநாதர் கோவிலில் இருந்த சிவலிங்கம் திடீரென கண்டறியப்பட்டதால் பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே உள்ள ஒரு கிராமத்தில் அமைந்துள்ள அகிலாண்டேஸ்வரி கைலாசநாதர் திருக்கோயிலில், கந்த சஷ்டி திருவிழா நடைபெற்றது. அங்கிருந்த சிவலிங்கத்திற்கு பூஜை செய்யும் போது, திடீரென சிவலிங்கத்தில் ஒற்றைக்கண் தோன்றியதால் பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.

இதை பார்த்த பக்தர்கள் நெற்றிக்கண் திறந்ததாக கூறி, பரவசமடைந்து, "ஓம் நமச்சிவாயா" என்ற கோஷங்களை எழுப்பினர். இந்த தகவல் அப்பகுதியில் மிக வேகமாக பரவியதால், பக்தர்கள் வரிசையில் நின்று,  சிவலிங்கத்தின் நெற்றிக்கண் திறந்த காட்சியை காண  வந்தனர்.

பக்தர்களில் சிலர் இக்காட்சியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர். பகல் 12 மணி முதல் இரவு 9 மணி வரை இந்த அரிய காட்சி நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர் சிவலிங்கம் சிலைக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பூஜை நடத்தப்பட்டது.


Edited by Mahendran