1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 7 மார்ச் 2025 (15:45 IST)

நீ என்ன பண்றேன்னு தெரியாதுன்னு நினைச்சியா? தொலைச்சிடுவேன் உன்ன!? - ஓபன் ஸ்டேஜில் மிரட்டல் விடுத்த ராஜேந்திர பாலாஜி!

Rajendra Balaji vs Mafa Pandiyarajan

சிவகாசியில் அதிமுக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, சக அதிமுக முன்னாள் அமைச்சரான மாஃபா பாண்டியராஜனை மேடையில் வைத்து மிரட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக பிரபலங்கள் இடையே ஏற்பட்டு வரும் கருத்து மோதல்கள் கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அவ்வாறாக சமீபமாக அதிமுக முன்னாள் அமைச்சர்களான ராஜேந்திர பாலாஜி, மாஃபா பாண்டியராஜன் இடையே வாக்குவாதம் முற்றி வருகிறது.

 

முன்னதாக நடந்த ஒரு அதிமுக நிகழ்ச்சியில் ராஜேந்திர பாலாஜி தொண்டர் ஒருவரை அறைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அதுகுறித்து சிவகாசியில் நடந்த கூட்டத்தில் பேசிய ராஜேந்திர பாலாஜி “பல கட்சிகளுக்குச் சென்று வந்த மாஃபா பாண்டியராஜனுக்கு சால்வை அணிவித்ததால் நிர்வாகியை அறைந்தேன். மாவட்டச் செயலாளராக நான் இருக்கும்போது மாஃபாவுக்கு சால்வை அணிந்தால் விட முடியுமா?” என்று பேசியுள்ளார்.

 

மேலும் மாஃபாவை குறிப்பிட்டு “நீ செய்வதையெல்லாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். நான் கிறுக்கனோ பைத்தியக்காரனோ அல்ல. தொலைத்துவிடுவேன்” என ஓபன் ஸ்டேஜில் மிரட்டிய பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகத் தொடங்கியுள்ளது. இந்த சம்பவம் அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K