திங்கள், 16 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 21 டிசம்பர் 2023 (10:49 IST)

இன்று 7 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
இன்று காலை நான்கு மாவட்டங்களில் மழை பெய்யும் என்று ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் தற்போது ஏழு மாவட்டங்களில் மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. 
 
 மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ,மற்றும் சிவகங்கை ஆகிய 7 மாவட்டங்களில் இன்று லேசான மழை முதல் மிதமான மழை பெய்யும் என அறிவித்துள்ளது.  
 
அரபி கடலில் உருவான காற்றழுத்த கீழடுக்கு சுழற்சி காரணமாக  இன்று டெல்டா மாவட்டங்களில் மழை பெய்யும் என்று இருப்பினும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை நேரத்தில் சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் தென் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கிய பொதுமக்களை மீட்கும் பணி விருவிற்காக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
Edited by Mahendran