புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள், கனமழையின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாகவே, புதுச்சேரி மாநில அரசு புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து உத்தரவிட்டது. இந்தச் சூழலில், புதுவை மத்திய பல்கலைக்கழக நிர்வாகம் இன்று நடக்கவிருந்த அனைத்துத் தேர்வுகளையும் ஒத்திவைத்து அறிவித்துள்ளது. தேர்வுகள் நடைபெறும் மாற்றுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார். Edited by Mahendran