புதன், 18 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 18 டிசம்பர் 2024 (14:04 IST)

காங்கிரஸ் கட்சி தான் அம்பேத்கருக்கு எதிரானது: சர்ச்சைக்கு விளக்கம் அளித்த பிரதமர் மோடி

PM Modi speech
பாராளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அண்ணல் அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பல அரசியல்வாதிகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி தான் அம்பேத்கருக்கு எதிரானது என்று கூறிய பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார்.
 
அம்பேத்கரை காங்கிரஸ் கட்சி அவமதித்ததை நாட்டு மக்கள் நன்றாக உணர்ந்திருக்கிறார்கள் என்றும், அதை மறைக்கவே காங்கிரஸ் தற்போது முயற்சி செய்கிறது என்று கூறிய பிரதமர், அம்பேத்கரை இரண்டு முறை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தான் தோற்கடித்தது என்றும், அவரின் பாரம்பரியத்தை அளிக்க ஒரு வம்சத்தின் கட்சியின் முழுமையாக ஈடுபட்டது என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
 
மேலும், டாக்டர் அம்பேத்காரரை நாங்கள் முழுமையாக மதிக்கிறோம் என்றும், அம்பேத்கர் ஆள்தான் நாம் இந்த நிலையில் இருக்கிறோம் என்றும் கூறினார். அம்பேத்கரின் கனவுகளை நிறைவேற்ற கடந்த 10 ஆண்டுகளாக பாஜக பணியாற்றி வருகிறது என்றும், அமைச்சர் பேச்சை குறித்த சர்ச்சைக்கு பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார்.
 
 
Edited by Mahendran