திங்கள், 16 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 30 ஜனவரி 2024 (19:14 IST)

சவுக்கு சங்கர் மீது போலீஸார் வழக்குப் பதிவு

savukku shankar
பிரபல  யூடியூபரும், சவுக்கு மீடியாவின் ஆசிரியருமான சவுக்கு சங்கர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 

காஞ்சிபுரம், பரந்தூர் விமான நிலையம் அமையவுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து  கடந்த 26 ஆம் தேதி போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் ஈடுபட்டதாக பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே சவுக்கு சங்கரை கைது செய்ய சுங்குவார்சத்திரம் போலீஸார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகிறது.

சவுக்கு சங்கர் ஏற்கனவே  ஒரு வழக்கில்  கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு பின் ஜாமீனில் வெளியே வந்தது குறிப்பிடத்தக்கது.