திங்கள், 16 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 5 பிப்ரவரி 2024 (11:55 IST)

பாஜக கூட்டணியில் பாமக? ஜி.கே.வாசன் மற்றும் அன்புமணி இன்று சந்திப்பா?

gk vasan
பாஜக கூட்டணியில் பாமகவை இணைக்க அக்கட்சியின் தலைவர் அன்புமணியிடம் ஜி கே வாசன் பேச்சு வார்த்தை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது

 வரும் ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தமிழகத்தில் திமுக தரப்பு விறுவிறுப்பு கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது,. வெளிநாட்டிலிருந்து முதல்வர் ஸ்டாலின் சென்னை திரும்பியதும்  கூட்டணி குறித்த ஒப்பந்தம் கையெழுத்து ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் அதிமுக பக்கம் எந்த கூட்டணியும் இல்லாத நிலையில் பாஜகவும் தனது கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டது. குறிப்பாக ஜிகே வாசன் பாஜக  கூட்டணிக்கு அரசியல் கட்சிகளை கொண்டு வரும் பணியை செய்து வருவதாக தெரிகிறது.

இந்த நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்களை டெல்லியில் இன்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் சந்திக்க இருப்பதாகவும்  பாஜக கூட்டணியில் பாமக இடம்பெற வேண்டும் என்று தனிப்பட்ட முறையில் அவர் அன்புமணியிடம் வலியுறுத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  

பாஜக கூட்டணியில் இடம் பெற்றால் கணிசமான தொகுதிகள் கிடைப்பது மட்டுமின்றி  மாநிலங்களவை இடமும் கிடைக்கும் என்றும் வெற்றி பெற்றால் இணை அமைச்சர் பதவியும் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் ஜிகே வாசன் கூற இருப்பதாக தெரிகிறது.  இதனை அடுத்து தேமுதிக உள்ளிட்ட கட்சிகளிடமும் ஜிகே வாசன் பேச்சு வார்த்தை நடத்துவார் என தெரிகிறது

Edited by Mahendran