1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 23 ஜூன் 2025 (07:55 IST)

இந்துவாக இருந்தால் மதவாதி என்கிறார்கள்.. முருகன் மாநாட்டில் பவன்கல்யாண் பேச்சு..!

Pawan Kalayan
ஒருவன் இந்துவாக இருந்தாலே மதவாதி என்கிறார்கள் என்று நேற்று நடைபெற்ற முருகன் மாநாட்டில் ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
மதுரைக்கும் முருகனுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. "என்னை மதுரைக்கு வரவழைத்தது முருகன். என்னை வளர்த்தது முருகன். எனக்கு துணிச்சல் தந்தது முருகன். எனது நம்பிக்கையை கொண்டாட எனக்கு உரிமை இருக்கிறது. அதை யாரும் கேள்வி கேட்க முடியாது," என்று பவன் கல்யாண் பேசினார்.
 
"என் மதத்திற்கு யாரும் மரியாதை கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை; அவமரியாதை செய்ய வேண்டாம். இந்துக்களை சீண்டி பார்க்க வேண்டாம். சாது மிரண்டால் காடு கொள்ளாது," என்று அவர் தெரிவித்தார். "ஒருவன் இந்துவாக இருந்தாலே பிரச்சனையாக உள்ளது என்றும், மதவாதி என்று சொல்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
 
"என் கடவுளை கேலி செய்துவிட்டு அதை மதச்சார்பின்மை என்கிறார்கள். அரசமைப்பு கொடுத்த கருத்து சுதந்திரத்தை பயன்படுத்தி இவ்வாறு பேசுகின்றனர்," என்றும் அவர் திமுகவை மறைமுகமாக குற்றம் சாட்டினார். மேலும், "நம் கடவுளை திட்டும் கூட்டம் காணாமல் போய்விடும் என்றும்,  அவர் தெரிவித்தார்.
 
Edited by Siva