திங்கள், 16 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 26 டிசம்பர் 2023 (16:38 IST)

அண்ணாமலை சொன்னதால் தான் ஈரோடு கிழக்கு தேர்தலில் போட்டியிடவில்லை: ஓபிஎஸ்

அண்ணாமலை சொன்னதால்தான் ஈரோடு கிழக்கு தேர்தலில் வேட்பாளரை நிறுத்தவில்லை என முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த  சில மாதங்களுக்கு முன்னர் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடைபெற்ற போது அதிமுக இரு பிரிவுகளாக இருந்தது.  இதனை அடுத்து அதிமுக ஈபிஎஸ் பிரிவு அதிகாரபூர்வமாக வேட்பாளரை அறிவித்த போது ஓபிஎஸ் தனது பிரிவின்  சார்பாக ஒரு வேட்பாளர் அறிவித்தார்.
 
மேலும் நீண்ட இழுபறி பேச்சுவார்த்தைக்கு பின்னரே பாஜக அதிமுகவுக்கு ஆதரவு கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தேர்தலில் போட்டியிடவில்லை என்று ஓபிஎஸ் திடீரென முடிவெடுத்தது வேட்பாளரை வாபஸ் பெற வைத்தார். இந்த செயல் அவரது ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. '
 
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் ஈரோடு கிழக்கு தேர்தலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சொன்னதால்தான் தேர்தலில் போட்டியிடாமல் வாபஸ் பெற்றோம் என்பது கூறியுள்ளார். அவரது இந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran