செவ்வாய், 12 ஆகஸ்ட் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 8 ஆகஸ்ட் 2025 (14:58 IST)

செல்லூர் ராஜூவை காரில் ஏற வேண்டாம் என சொன்னாரா ஈபிஎஸ்? என்ன நடந்தது?

சமீபத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுரைக்கு சென்றபோது, அவர் பயணித்த காரில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு ஏற முயன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 
 
அப்போது, "நீங்கள் வேறு காரில் வாருங்கள்" என்று பழனிசாமி கூறியதாக பரவிய தகவலையடுத்து, இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளதாக பேசப்பட்டது.
 
இந்த விவகாரம் குறித்து செல்லூர் ராஜு தற்போது விளக்கமளித்துள்ளார். அவர் கூறுகையில், "எடப்பாடி பழனிசாமியின் பாதுகாப்பு மத்திய அரசால் ஒய் பிரிவில் இருந்து இசட் பிரிவாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், அவரது காரில் பாதுகாப்பு அதிகாரிகள் இருந்தனர். 
 
அந்த அதிகாரிகள் இருந்ததால்தான், வேறு காரில் வாருங்கள்' என்று பழனிசாமி என்னிடம் கூறினார். மற்றபடி, எங்களுக்கிடையே எந்தவிதமான கருத்து வேறுபாடும் இல்லை" என்று தெளிவுபடுத்தியுள்ளார். 
 
இதன் மூலம், சமூக வலைதளங்களில் பரவிய சர்ச்சைகளுக்கு செல்லூர் ராஜு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
 
Edited by Mahendran