புதன், 1 அக்டோபர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 16 செப்டம்பர் 2025 (07:55 IST)

அதிமுகவில் இருந்து நீக்கியவர்களை மீண்டும் சேர்க்க முடியாது: கெடு முடிந்த நாளில் ஈபிஎஸ் திட்டவட்டம்..!

அதிமுகவில் இருந்து நீக்கியவர்களை மீண்டும் சேர்க்க முடியாது: கெடு முடிந்த நாளில் ஈபிஎஸ் திட்டவட்டம்..!
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி  சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசியபோது, கட்சி அலுவலகத்தை தாக்கியவர்கள் மற்றும் அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க நினைத்தவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார். செங்கோட்டையன் விதித்த கெடு முடிந்த நாளில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
 
கடந்த சில மாதங்களாக, ஓபிஎஸ் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைய வாய்ப்புள்ளதாக பல ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின. ஆனால், ஈபிஎஸ்-ன் இந்த கருத்து, அத்தகைய சமாதான பேச்சுவார்த்தைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக அமைந்துள்ளது.
 
கடந்த சில வருடங்களுக்கு முன், அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. அப்போது, ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சி அலுவலகத்தைஉடைத்து சேதப்படுத்தினர் என்று ஈபிஎஸ் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. அதுமட்டுமின்றி, அப்போது அ.தி.மு.க. ஆட்சியை விமர்சித்து வந்ததன் மூலம், ஆட்சியை கவிழ்க்க நினைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
ஈபிஎஸ்-ன் இந்த முடிவு அ.தி.மு.க.வில் அவரது தலைமை வலுவாக இருப்பதை காட்டுகிறது. 
 
Edited by Siva