வியாழன், 13 நவம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 3 ஜூலை 2025 (11:28 IST)

நீட் மறு தேர்வு நடத்த உத்தரவிட முடியாது: மாறுபட்ட தீர்ப்பை கொடுத்த இரண்டு நீதிமன்றங்கள்..!

highcourt
கடந்த மே மாதம் 5 ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வின்போது, மின்வெட்டு ஏற்பட்டதால் தங்களால் சரியாக தேர்வு எழுத முடியவில்லை என மத்திய பிரதேசத்தை சேர்ந்த மாணவர்கள் சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கில், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
மின்சாரத் துண்டிப்பால் நீட் தேர்வை சரியாக எழுத முடியவில்லை என கூறி, மறுதேர்வு நடத்த கோரி 16 மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். இதன் மூலம், அதேபோன்ற ஒரு வழக்கில் மத்தியப் பிரதேச நீதிமன்றம் மறுதேர்வுக்கு உத்தரவிட்ட நிலையில், இரு வேறு நீதிமன்றங்களின் மாறுபட்ட தீர்ப்புகள் வெளியாகியுள்ளன.
 
மாணவர்களின் கோரிக்கை குறித்து விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தனர். அவ்வாறு உத்தரவிட்டால் 20 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் நீதிபதிகள் தங்கள் முடிவுக்கு காரணமாகக் கூறினர்.
 
மழையால் ஏற்பட்ட மின்சார துண்டிப்பு காரணமாகத் தங்களால் நீட் தேர்வை சரியாக எழுத முடியவில்லை என்று மாணவர்கள் தரப்பில் வாதாடினர். ஆனால், நீதிமன்றம் அதை ஏற்க மறுத்துவிட்டது.
 
முன்னதாக, மின்வெட்டு காரணமாக நீட் தேர்வு மறுநீட் தேர்வு நடத்த வேண்டும் என மத்தியப் பிரதேச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது, இது சட்ட உலகில் இரு வேறுபட்ட தீர்ப்புகளாக பார்க்கப்படுகிறது.
 
 
Edited by Mahendran