திங்கள், 16 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 20 நவம்பர் 2024 (11:08 IST)

கலைஞர் சிலை மேல் கை வைத்தால்.. பதம் பார்ப்போம்! - சீமானுக்கு அமைச்சர் சேகர்பாபு எச்சரிக்கை!

Seeman Sekar babu

தமிழகத்தில் கலைஞர் சிலைகள் அகற்றப்படும் என பொருள்படும்படி சீமான் பேசியிருந்த நிலையில் அதற்கு அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்துள்ளார்.

 

 

தமிழக அரசின் திட்டங்களுக்கு கலைஞர் கருணாநிதியின் பெயர் வைப்பது குறித்த சர்ச்சை சமீபமாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு பொருளாகியுள்ளது. சமீபத்தில் இதுகுறித்து கருத்து தெரிவித்த சீமான், வங்கதேசம், ஆந்திர மாநிலங்களில் கூட இப்படியாக தலைவர்களை முன்னிறுத்தி வைக்கப்பட்ட சிலைகளை மக்களே தூர எறிந்தார்கள், தமிழகத்திலும் அந்த நிலை ஒருநாள் வரும். ஆட்சி மாறினால் சிலைகள் தகர்க்கப்படும் என பேசியிருந்தார்.
 

 

இது பெரும் சர்ச்சைக்குள்ளான நிலையில் செய்தியாளர் சந்திப்பில் இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு “கலைஞரின் சிலை மீது கை வைக்க நினைத்தால் கழக உடன்பிறப்புகள் அவர்களை பதம் பார்ப்பார்கள். சமத்துவம், சமாதானம் பேசுவதால் எங்களை கோழைகள் என நினைக்க வேண்டாம். எப்படிப்பட்ட படை வந்தாலும் அதை முறியடிப்பதுதான் திராவிட மாடல் படை.  சீமான் ஒரு வாய்ச்சொல் வீரர், அவர் களத்தில் நின்று வென்றுகாட்ட வேண்டும்” என கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K