1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 13 மார்ச் 2025 (16:18 IST)

பால், தயிர் விலை மீண்டும் அதிகரிப்பு.. ஒரு லிட்டருக்கு 4 ரூபாய் உயர்வா?

milk
தனியார் பால், தயிர் விலை மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் மாநில தலைவர் பொன்னுசாமி இந்த விலையேற்றத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
பிப்ரவரி முதல் வாரத்தில் தனியார் பால் நிறுவனங்கள் விற்பனை விலையை உயர்த்தியிருந்த நிலையில்,  ஆரோக்யா பால் மற்றும் தயிரின் விலை இன்று முதல்  மீண்டும் உயர்ந்துள்ளது. விலையேற்றம் குறித்த விவரங்கள்
 
நிறைகொழுப்பு பால்:
 
 நிறைகொழுப்பு பால்:
 
500 மிலி: ரூபாய் 38 ➝ ரூபாய் 40
1 லிட்டர்: ரூபாய் 71 ➝ ரூபாய் 75
மற்றொரு வகை 1 லிட்டர்: ரூபாய் 78 ➝ ரூபாய் 82
 
நிலைப்படுத்தப்பட்ட பால்:
 
500 மிலி: ரூபாய் 33 ➝ ரூபாய் 34
1 லிட்டர்: ரூபாய் 63 ➝ ரூபாய் 65
 
தயிர்:
 
400 கிராம்: ரூபாய் 32 ➝ ரூபாய் 33
 
இதன் மூலம் நிறைகொழுப்பு பாலின் விலை லிட்டருக்கு ரூபாய் 80 என்ற உச்ச நிலையை எட்டியுள்ளது.
 
இரண்டாவது முறையாக ஒரே மாதத்தில் பால் மற்றும் தயிர் விலையை உயர்த்தும் இந்த முடிவை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர் சங்கம் கண்டித்துள்ளது.
 
Edited by Mahendran