திருவண்ணாமலை கார்த்திகை தீபம்: சிறப்பு பேருந்துகள், ரயில்கள் இயக்க முடிவு..!
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவிற்காக, அமைச்சர்கள் எ.வ. வேலு மற்றும் சேகர்பாபு தலைமையில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு சுமார் 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாநிலம் முழுவதும் இருந்து 4,764 பேருந்துகள் இயக்கப்படுகின்றன; தேவைக்கேற்ப கூடுதலாக 20% பேருந்துகளும், 16 சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன.
பக்தர்களுக்காக 24 தற்காலிக பேருந்து நிலையங்களும், 130 கார் பார்க்கிங் இடங்களும் அமைக்கப்பட்டுள்ளன. தற்காலிக நிலையங்களிலிருந்து கிரிவல பாதைக்கு 220 தனியார் கல்லூரி பேருந்துகள் இலவசமாக இயக்கப்படும்.
பாதுகாப்பிற்காக 15,000 காவல்துறையினர் மற்றும் 430 தீயணைப்பு வீரர்கள், 1,060 கண்காணிப்புக் கேமராக்கள், 24 கண்காணிப்புக் கோபுரங்கள் மற்றும் 61 காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மழையால் நீர் தேங்காமல் இருக்க முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
Edited by Mahendran