திங்கள், 16 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 7 மார்ச் 2024 (10:20 IST)

திமுக கூட்டணியில் இடமில்லையா? செர்பியா பயணத்தை ரத்து செய்த கமல்ஹாசன்..!

திமுக கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி இடம்பெறும் என்றும் அந்த கட்சிக்கு திமுக ஒரு தொகுதி ஒதுக்கும் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் கமல்ஹாசன் தரப்பு இரண்டு தொகுதிகள் கேட்டதாகவும் அதுமட்டுமின்றி தங்களது சொந்த சின்னமான டார்ச் லைட் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்று கூறியதாகவும் செய்திகள் வெளியாகின.

ஆனால் திமுக தரப்பு திட்டவட்டமாக மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு தொகுதி தான் என்றும் அதுவும் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்று நிபந்தனை விதித்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில் ‘தக்லைஃப்’ படத்திற்காக செர்பியா செல்ல வேண்டிய கட்டாயம் கமலஹாசனுக்கு இருந்தது. ஆனால் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையை முடித்துவிட்டு தான் செர்பியா செல்ல வேண்டும் என்று முடிவு செய்த கமல்ஹாசன் செர்பியா பயணத்தை ரத்து செய்து விட்டதாகவும் அடுத்த கட்ட ஆலோசனை குறித்து அவர் இன்று மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது.

திமுக கூட்டணியில் ஒரு தொகுதியை வாங்கிக்கொண்டு உதயசூரியன் சின்னத்தில் கமல்ஹாசன் போட்டியிடுவாரா? அல்லது வேறு ஏதேனும் அதிரடி முடிவெடுப்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Edited by Mahendran