திங்கள், 24 நவம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 31 மே 2025 (15:40 IST)

திமுகவை எதிர்ப்பதாக கட்சி தொடங்கியபோது கூறினீர்களே? கேள்விக்கு பதில் சொல்லாமல் போன கமல்..!

திமுகவை எதிர்ப்பதாக கட்சி தொடங்கியபோது கூறினீர்களே? கேள்விக்கு பதில் சொல்லாமல் போன கமல்..!
நடிகர் மற்றும் அரசியல்வாதி கமல்ஹாசன் இன்று சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்த போது, "கட்சி தொடங்கியபோது திமுகவை எதிர்ப்பதாக கூறினீர்களே?" என்ற கேள்விக்கு பதில் சொல்லாமல் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
மலேசியா, சிங்கப்பூர் மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கு தக்லைப் புரமோஷனுக்கு செல்வதாக, சென்னை விமான நிலையத்தில் கமல்ஹாசன் பேட்டி அளித்தார்.
 
"இந்த படம் மக்கள் அனைவருக்கும் பிடிக்கும்" என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், "ராஜ்யசபா உறுப்பினர் பதவி மூலம் தமிழகத்தின் குரலாக இருப்பேன்" என்றும் அவர் உறுதி கூறினார்.
 
விஜய் கட்சி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே ஒரு புதிய கட்சியை தொடங்கியவன். என்னால் மற்ற புதிய கட்சிகளை விமர்சனம் செய்ய முடியாது" என்று கூறினார்.
 
அதன்பிறகு, "கட்சி தொடங்கிய புதைய புதிதில் திமுகவை எதிர்ப்பதாக கூறினீர்களே?" என்ற கேள்விக்கு பதில் சொல்லாமல் கிளம்பினார்.
 
அதன்பின், மீண்டும் திரும்பி வந்து, "நாட்டிற்கு தேவை. அதனால் வந்திருக்கிறேன்" என்று கூறிவிட்டு கோபமாக சென்று விட்டார்.
 
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran