புதன், 1 அக்டோபர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mhendran
Last Modified: புதன், 24 செப்டம்பர் 2025 (10:16 IST)

2021, 2022, 2023-ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் அறிவிப்பு. முழு விவரங்கள்..!

2021, 2022, 2023-ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் அறிவிப்பு. முழு விவரங்கள்..!
கலை மற்றும் கலாச்சார துறையில் சிறந்து விளங்கும் கலைஞர்களை பெருமைப்படுத்தும் வகையில், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், 2021, 2022 மற்றும் 2023-ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை அறிவித்துள்ளது.
 
கலைமாமணி விருதுடன், பாரதியார், எம்.எஸ். சுப்புலட்சுமி, பாலசரஸ்வதி ஆகியோர் பெயரில் வழங்கப்படும் அகில இந்திய விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
 
விருது பெறுவோர் முழு விவரங்கள்..!
 
பாரதியார் விருது (இயல்): முனைவர் ந. முருகேச பாண்டியன்
 
எம்.எஸ். சுப்புலட்சுமி விருது (இசை): பத்மபூஷன் டாக்டர் கே.ஜே. யேசுதாஸ்
 
பாலசரஸ்வதி விருது (நாட்டியம்): பத்மஸ்ரீ முத்துகண்ணம்மாள்
 
அகில இந்திய விருதுகள் பெறும் கலைஞர்களுக்கு ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு மற்றும் 3 சவரன் தங்கப் பதக்கம் வழங்கப்படும்.
 
மேலும், சிறந்த கலை நிறுவனத்திற்கான கேடயம் சென்னை, தமிழ் இசைச் சங்கத்திற்கும், சிறந்த நாடகக் குழுவிற்கான சுழற்கேடயம், மதுரை கலைமாமணி எம்.ஆர். முத்துசாமி நினைவு நாடக மன்றத்திற்கும் வழங்கப்படுகிறது. இந்த இரு நிறுவனங்களுக்கும் தலா ரூ.1 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்படும்.
 
Edited by Mhendran