திங்கள், 16 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 7 பிப்ரவரி 2024 (18:02 IST)

இந்த தேர்தலோடு அதிமுக காலியாகிவிடும்: மூத்த பத்திரிகையாளர் கருத்து..!

ADMK
வரும் நாடாளுமன்றத் தேர்தல் அதிமுகவுக்கு மிகவும் முக்கியமானது என்றும், இந்த தேர்தலில் வெற்றி பெற்று காட்ட வேண்டிய கட்டாயத்தில் எடப்பாடி பழனிச்சாமி இருப்பதாகவும், ஒருவேளை இந்த தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தால் அதிமுக காலி ஆகிவிடும் ஆபத்து இருப்பதாகவும், மூத்த பத்திரிகையாளர் பிரியன் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். 
 
திமுக கூட்டணி ஒரு பக்கம் விறுவிறுப்பாக கூட்டணி பேச்சு வார்த்தைகளை கிட்டத்தட்ட முடித்துவிட்ட நிலையில் அதிமுக கூட்டணி பக்கம் இன்னும் ஒரு பெரிய கட்சி கூட வரவில்லை என்பது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 
 
நோட்டாவுக்கும் கீழே வாக்கு சதவீதத்தை வைத்திருப்பதாக கூறப்படும் பாஜகவை நோக்கி பல கட்சிகள் கூட்டணிக்கு சென்று கொண்டிருக்கும் நிலையில் தமிழகத்தில் சுமார் 35 சதவீதம் வாக்கு சதவீதங்களை வைத்திருக்கும் அதிமுகவுடன் ஒரு கட்சி கூட கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தாதது அதிமுக தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
எனவே இந்த தேர்தலில் அதிமுக எதையாவது செய்து குறைந்தபட்சம் இரண்டு முதல் நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்றாக வேண்டும், இல்லையே அதிமுக இடத்தை பாஜக மற்றும் விஜய் கட்சி பிடித்து விடும் என்று பத்திரிகையாளர் பிரியன் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran