திங்கள், 16 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 17 நவம்பர் 2023 (19:16 IST)

கொள்ளை அடிப்பவர்களுக்கு பதவி,பட்டம்…வழங்குவதும்தான் திராவிட மாடலா? - ராஜேஸ்வரி பிரியா

rajeshwari priya
சாமானியர்களின் குரல்வளையை நசுக்கும் அராஜக போக்கினை அரசு கைவிட வேண்டும்.ஏழு விவசாயிகளின் மீது குண்டர் சட்டம் போட்டு வெவ்வேறு சிறைகளில் அடைக்கபட்டிருப்பது முற்றிலும் மக்களாட்சிக்கு எதிரான ஒன்று என அனைத்து மக்கள் அரசியல் கட்சித் தலைவர் ராஜேஸ்வரி பிரியா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

''சாமானியர்களின் குரல்வளையை நசுக்கும் அராஜக போக்கினை அரசு கைவிட வேண்டும்.ஏழு விவசாயிகளின் மீது குண்டர் சட்டம் போட்டு வெவ்வேறு சிறைகளில் அடைக்கபட்டிருப்பது முற்றிலும் மக்களாட்சிக்கு எதிரான ஒன்றாகும்.

மணல் கொள்ளையர்களுக்கு மகுடம் சூட்டுவதும், மக்கள் வரி பணத்தினை கொள்ளை அடிப்பவர்களுக்கு பதவி,பட்டம்…வழங்குவதும்தான் திராவிட மாடலா? அமலாக்கதுறையால் விசாரிக்கப்பட்டு வரும் கைதிக்கு ஜாமின் வாங்க பல்வேறு யுக்திகளை கையாண்டு வரும் திமுகவினை பார்த்து மக்கள் கேள்வி கேட்கத் தயாராகிவிட்டனர். உண்மையான விடியலை மக்கள் விரைவில் உங்களுக்கு காட்டுவார்கள்'' என்று தெரிவித்துள்ளார்.