அயோத்தி கும்பாபிஷேக நிகழ்வுக்கு அழைப்பு! - அழைப்பிதழை பெற்று கொண்ட ரஜினிகாந்த்!
அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கான அழைப்பிதழை நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார்.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமருக்கு பிரம்மாண்டமான கோவில் கட்டும் பணி நடந்து வந்த நிலையில் தற்போது கட்டுமான பணிகள் முழுவதுமாக முடிந்துள்ளது. அதை தொடர்ந்து கும்பாபிஷேகத்திற்கான பணிகளும், பிரபலங்களுக்கு அழைப்பிதழ் விடுக்கும் பணிகளும் வேகமாக நடந்து வருகின்றது.
அயோத்தி, ஶ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா சார்பில், நடிகர் ரஜினிகாந்த் அவர்களையும், அவரது குடும்பத்தினரையும் ஜனவரி 22ம்தேதி அயோத்தி கும்பாபிஷேக நிகழ்வுக்கு வரவேண்டி அழைப்பிதழை கொடுப்பதற்காக, சென்னை போயஸ் கார்டனில் அவரது இல்லத்தில் ஆர்.எஸ்.எஸ் தென் பாரத அமைப்பாளர் செந்தில்குமார் தென்பாரத மக்கள் செயலாளர் (மக்கள் தொடர்பு )பிரகாஷ் மாநில இணைச்செயலாளர் (மக்கள் தொடர்பு) இராம இராஜசேகர் மாநகர் பொறுப்பாளர் ராம்குமார் மற்றும் பாஜக, சமூக ஊடகப் பார்வையாளர் அர்ஜுனமூர்த்தி ஆகியோர் அழைப்பிதழை வழங்கினர்.
உறுதியாக குடும்பத்துடன் வருவதாகவும், மிகவும் பாக்கியமாகக் கருதுவதாகவும், எல்லாம் ஶ்ரீராமரின் அருள் எனவும் உணர்வுப்பூர்வமாக ரஜினிகாந்த் அவர்கள் கூறி, பயபக்தியுடன் அழைப்பிதழைப் பெற்றுக்கொண்டார்.