திங்கள், 16 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 2 பிப்ரவரி 2024 (19:15 IST)

''வெகுஜன மக்களை அவர் ஈர்க்க வேண்டும்''- விஜயின் அரசியல் வருகை பற்றி சீமான் கருத்து

seeman-vijay
விஜய் அரசியல் கட்சி தொடங்கியுள்ள நிலையில், இதுகுறித்து கருத்து கூறிய சீமான், ''வெகுஜன மக்களை அவர் ஈர்க்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

தனது மக்கள் இயக்கம் மூலம் மக்களுக்கு உதவிகள் செய்து வந்ததுடன், தனது படங்களிலும், ஆடியோ நிகழ்ச்சிகளிலும் அரசியல் கருத்துகள் தெரிவித்து வந்த விஜய் இன்று தமிழக வெற்றி கழகம் என்ற  பெயரில்  புதிய அரசியல் கட்சி தொடங்கியுள்ளார். இதனால், விஜய் மக்கள் இயக்கத்தினர், அவரது ரசிகர்கள் என பலரும் கொண்டாடி வருகின்றனர்.

விஜய்யின் புதிய அரசியல் கட்சி அறிவிப்பு பற்றி அரசியல் தலைவர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

இந்த  நிலையில்,  நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கட்சி தொடங்குவது எளிது. தொடர்வது ரொம்ப கடினம், கட்சி தொடங்கும்போது இருக்கிற ஆர்வமும், ஈடுபாடும் கடைசிவரை இருந்தால் யார் வேண்டுமானாலும் வெல்லலாம். அதில் விஜய் மட்டும் விதிவிலக்கல்ல. இன்றைக்கு இருக்கும் அரசியல் சூழலில் ஒரு நடிகனின் ரசிகர்கள் மட்டும் வாக்கு செலுத்தி  நாட்டை ஆள்வது என்பது சரித்திர புரட்சியாகும். ஆனால், வெகுஜன மக்களை அவர் ஈர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.